Wednesday, March 28, 2012

notice.......this


அழும் பெண்களின் அழகு குறையும்

எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்றும், அவர்களது அழகு குறையும் என்றும் சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள் எப்பொழுதுமே அதிகளவு உணர்ச்சி வசப்படுவார்கள், ஏதாவது ஒரு சின்ன கஷ்டம் என்ற உடனே அழுது விடுவார்கள். தமது துயரம் மட்டுமல்லாமல் மற்றவர்களின் துன்பங்களை கேட்டாலும் அழுதுவிடுவர்.
இந்நிலையில் இஸ்ரேலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டனர். இதில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை மட்டும் தனிக்குழுவாக பிரித்து பரிசோதனை செய்தனர். அந்த குழுவின் மொத்தம் 60 பெண்கள் இருந்தனர்.
பெண்கள் அமர்ந்திருந்த தனி அறையில் மிகவும் மோசமான அழுகை காட்சிகள் கொண்ட திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் அரைமணிநேரம் படம் ஓடியது. இதனால் பெண்களுக்கு கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.
அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள் படம்பார்த்து கண்ணீர் வடித்த பெண்களின் கண்ணீரை சோதனைக் குழாய்களில் சேகரித்தனர்.
கண்ணீர் வராத பெண்களுக்காக மற்றொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரை தயார் செய்தனர்.
பின்னர் கண்ணீர் வடிந்த பெண்களின் முகத்தில் உண்மையான கண்ணீரையும், கண்ணீர் வராத பெண்களின் முகத்தில் உப்புநீரையும் பேசியல் செய்து போல் அப்ளை செய்தார்கள். இப்போது யாருக்கு உண்மையான கண்ணீர், யாருக்கு பொய்யான கண்ணீர் என்பது ஆய்வாளர்களை தவிர மற்றவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில் வெளியே இருந்த ஆண்கள் சிலரை உள்ளே அழைத்து அந்த பெண்களின் அருகில் சென்று பேசச் செய்தார்கள். அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களை துல்லியமாக பதிவு செய்தனர்.
அதே வேளையில் ஆண்களுக்கு காதல் உணர்வை தோற்றுவிக்கும் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவர்களது உடலில் எந்தளவு சுரக்கிறது என்பதையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் முடிவில் கண்ணீர் வடிக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்றும், அவர்களது அழகு குறையும் என்பதும் தெரியவந்தது